உலகின் பணக்கார கைதி இவர் தான்- வாய் பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு
Changpeng Zhao, உலகின் பணக்கார கைதியாக அறியப்படுகிறார்.
உலகின் மிகப்பெரிய பணக்கார கைதி
கிரிப்டோ நிறுவனமான Binanceன் நிறுவனர் Changpeng Zhao, 2024 இல் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் பைனான்ஸில் சட்டவிரோத செயல்களாகும்.
கைது செய்யபட்ட Zhao Cryptocurrency பரிமாற்றமான Binance நிறுவனத்தின் நிறுவனர், சட்டவிரோத பரிவர்த்தனை செயல்களுக்காக இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவரின் சட்டவிரோத செயல் சைபர் குழுக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. Bloomberg நிறுவனத்தின் கூற்றுப்படி இவர் கைது செய்யபட்டாலும் அவரது செல்வம் அதாவது அவரது நிதி உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என தெரிவித்தது.
இவர் கைதியாக சிறையின் உள்ளே செல்லும் போது அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு $43 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

பின்னர் 2025 ஆண்டு நிலவரப்படி பார்த்த போது இவரின் சொத்து மதிப்பு 74.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (ரூ. 6,20,01,00,00,00,000 அல்லது ரூ. 6.2 லட்சம் கோடி) உயர்ந்தது.
இதற்கு பின்னர் தான் இவர் உலகின் மிகப்பெரிய பணக்கார கைதியாக பிரபலமானார். Zhao 2023 ம் ஆண்டில் நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகியிருந்தாலும், பைனான்ஸில் உள்ள 90% உரிமையை தக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இவரின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் வலுவான செல்வாக்கும் காணப்பட்டது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |