யூடியூப் தளத்தின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? வாயடைக்க வைக்கும் தொகை!
தற்காலத்தில் இணைய உலகில், சாம்பவானாக தினழும் யூடியூப் ஒரு பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் மாறியிருக்கின்றது என்றால் மிகையாகாது.
இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரையில், யூடியூப் மூலம் மட்டுமே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கண்டண்ட் கிரியேட்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றார்கள்.
கண்டண்ட் கிரியேட்டர்களே மில்லியன் கணக்கில் வருமானம் ஈர்ட்டும் போது, இந்தத் தளத்தின் உரிமையாளரான கூகுள் ஆல்ஃபாபெட் நிறுவனம் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து பார்த்ததுணடா? இது குறித்த முழுமையாக தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
யூடியூபின் வருமானம்
யூடியூப்பின் வணிக மாதிரி மிகவும் எளிமையானது. யூடியூபில் வீடியோக்களுக்கு இடையே காட்டப்படும் விளம்பரங்கள் மூலம்தான் அதிக வருமானம் ஈட்டுகின்றது.
விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்புகளை அல்லது சேவைகளை விளம்பரப்படுத்த யூடியூப்பிற்குப் எந்த பெரிய தொகையையும் செருத்த தயாராக இருக்கின்றார்கள்.
அந்தப் பணத்தில் ஒரு பகுதியை தான் யூடியூபில் தங்களின் வீடியோவைப் பதிவேற்றும் கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு யூடியூப் நிறுவனம் வழங்குகின்றது.
இதன் காரணமாகவே, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே யூடியூப் மூலம் தற்காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடிகிறது. இதன் மூலம் பலனடைந்து வருவர்கள் ஏராளம். யூடியூப் பலருக்கு தொழில் வாய்பபை வழங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கூகுளின் தமைமை நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க் (Alphabet Inc.) ஒவ்வொரு காலாண்டுக்கும் அதன் வருமான அறிக்கையை வெளியிட்டு வருகின்றது.
அதன் பிரகாரம் 2024 ஆம் ஆண்டின் அறிக்கைகளின்படி, யூடியூப் ஒரு வருடத்தில் விளம்பரங்கள் மூலம் மட்டும் சுமார் 31 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி) வருமானமாக பெற்றுள்ளது.
இந்த தொகையில், பிரீமியம் (YouTube Premium), யூடியூப் மியூசிக் (YouTube Music) போன்றவற்றிலிருந்து வரும் வருமானம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் விளம்பரங்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 70 மில்லியன் டாலர்கள் வரை (ரூ. 415 முதல் 580 கோடி) வருமானம் ஈட்டுகிறது.
சிறு மற்றும் பெரிய யூடியூபர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அதே நேரத்தில், இந்தத் தளம் அதன் உரிமையாளர்களுக்கு தினமும் பல நூறு கோடிகளைப் பெற்றுத் கொடுக்கின்றது.
ஆனால் யூடியூப் ஈட்டும் வருமானத்தின் ஒருபெரிய பகுதி கண்டண்ட் கிரியேட்டர்களுக்கு வழங்கப்படுகின்றது.
பொதுவாக, யூடியூப் விளம்பர வருமானத்தில் சுமார் 55% படைப்பாளிகளுக்கும், மீதமுள்ள 45% யூடியூபிற்கும் சொந்தமாகிறது என அறிழக்கைகளின் மூலம் தெரியவருகின்றது.
மேலும் இசை, கேமிங், வ்ளாக்கிங் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்திய யூடியூபர்கள் உலகிலேயே முன்னணி படைப்பாளிகளில் அங்கம் வகிக்கின்றார்கள்.
யூடியூப் தளமானது பொழுதுபோக்கு மற்றும் கற்றலின் வழியை மாற்றியமைத்ததோடு மட்டுமின்றி, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக்கொடுத்துள்ளது என்பது போற்றத்தக்க விடயம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |