மாதவிடாய் 7 நாட்களுக்கு மேல் நீடிக்கிறதா? அப்போ உடனே இந்த கஞ்சி குடிங்க
பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையான செயல்முறை என்றாலும் ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதியாகும்.
மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் தான் பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான பெண்களுக்க சாதாரண மாதவிடாய் சுழற்சி பொதுவாக 21 முதல் 35 நாட்கள் வரை நீடிக்கும்.
ஆனாலும் மன அழுத்தம், எடையில் ஏற்படும் மாற்றங்கள், உடற்பயிற்சி அளவுகள் மற்றும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் போன்ற காரணங்களால் மாதவிடாய் வெளியேறும் நாட்களில் வித்தியாசம் ஏற்படலாம்.
ஒரு முழு மாதவிடாயின் சாதாரண சுழற்சி 25 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும். 21 நாட்களுக்கு குறைவாக ரத்தம் வெளியேறினால் அந்த நிலையை “பாலிமெனோரியா” என அழைக்கிறார்கள்.
அதே சமயம், 35 நாட்களுக்கு மேல் நீடித்தால், “ஒலிகோமெனோரியா” என்றும் அழைக்கிறார்கள். மாதவிடாய் வெளியேறும் நாட்கள் 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்குமாயின் அது சாதாரணம் என மருத்துவர் கூறுகிறார்.

அந்தவகையில், 7 நாட்களுக்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய் நீடிக்க என்ன காரணம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மாதவிடாய் நீடிக்க காரணங்கள்
1. ஹார்மோன் மாற்றங்களின் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் சில பெண்களுக்கு நாட்கள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதாவது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்.
2. பாலிப்ஸ், ஃபைப்ராய்டுகள் அல்லது அடினோமயோசிஸ் போன்ற நிலைகள் மாதவிடாயின் போது அதிகப்படியான ரத்தத்தை வெளியேற்றும். 20-80% பெண்கள் 50 வயதை அடையும் போது நார்த்திசுக்கட்டிகளை உருவாக்குவார்கள். இந்த சமயங்களில் ரத்தம் அதிகம் வெளியேறும்.

3. பெண் இனப்பெருக்க உறுப்புகளின் பாக்டீரியா தொற்றான PID கிளமிடியா அல்லது கோனோரியா போன்ற பாலியல் ரீதியாக பரவும் இந்த தொற்றுக்களை (STIs) என அழைக்கிறார்கள். இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் இடுப்பு வலியை ஏற்படுத்தும்.
பெண்கள் மாதவிடாய் வெளியேறும் சமயத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியாயின், மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய அரசி கஞ்சி எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

அரிசி கஞ்சி
தேவையான பொருட்கள்
- சம்பா அரிசி- முக்கால் டம்ளர்
- பாசிப் பருப்பு- ஒரு ஸ்பூன் அளவு
- தேங்காய் துருவல்
- பூண்டு - 5 பல்
- சீரகம்- அரை டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
சம்பா அரிசியை எடுத்து நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு சிறு துண்டுகளாக உடைக்கவும்.
அதன் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பயறு கொஞ்சமாக போட்டு மணம் வரை வறுத்தெடுக்கவும்.

அடுத்து, அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் எடுத்து தனியாக ஒரு பவுலில் போட்டு நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட அரிசி- பருப்பு இரண்டையும் குக்கரில் கொட்டி, தேவையான அளவு தேங்காய் துருவல், நான்கைந்து பல் பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும்.
அதனுடன் சீரகம், வெந்தயம், தேவையான அளவு உப்பு சேர்த்து 3 கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்து, 7 விசில் வைத்து மூடி விடவும்.
இறுதியாக கஞ்சிக்கு மேல் மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சுவையான அரசி கஞ்சி தயார்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடுக்கலாம். ஆனால் மாதவிடாய் சமயத்தில் பெண்களின் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |