கடினமான சூழ்நிலையிலும் நிதானமாக நடந்துக்கொள்ளும் ராசியினர்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்காலவாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் எவ்வளவு கடினமான பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் அதனை கடந்து செல்லும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி பிரச்சினைகளின் போதும், கோபத்திலும் கூட நிதானத்தை கடைப்பிடிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம்.
மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் இரக்க குணத்துக்கும், கற்பனை ஆற்றலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் கருணை உள்ளளம் காரணமாக எவ்வளவு பிரச்சினையில் இருந்தாலும் மற்றவர்களிம் அதை காட்டிக்கொள்ளாமல் மென்மையான பழகுவார்கள்.
மற்றவர்களால் பொறுடையாக கடக்கவே முடியாத விடயங்களை கூட இவர்கள் எளிமையாக கடந்துவிடுவார்கள். அந்தளவுக்கு இவர்களிம் பொறுமையும் நிதானமும் இயல்பாகவே இருக்கும்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும், கடக ராசியினர் எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்சினைகள் குறித்து முன்னரே அறியும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்க்கையில் நினைத்து பார்க்கவே முடியாத காலப்குதிகளையும் இவர்கள் நிச்சயம் புன்னகையுடன் கடந்திருப்பார்கள். சூழல் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் இவர்களின் மனதில் என்றும் அமைதி இருக்கும்.
அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் இவர்கள் வசீகர தோற்றத்துடன் இருப்பதால், இவர்களின் கவலைகளை மற்றவர்கள் அறியாத வகையில் இவர்களின் தோற்றமே பார்த்துக்கொள்ளும்.
துலாம்

நல்லிணக்கத்திதை பாதுகாப்பதற்கு பெயர் பெற்ற துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக குழுவின் அமைதியைக் காப்பவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் மற்றவர்களின் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தங்களின் துன்கங்களை அமைதியாக கடந்துவிடுவார்கள்.
வாழ்க்கையில் யாராலும் எதிர்கொள்ளவே முடியாத கடினமான சூழ்நிலைகளின் போதும் இவர்களின் முகத்தில் புன்னகை இருக்கும். இவர்களிடம் ஒரு அசாத்திய நிதானம் எப்போதும் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |