சனி- சுக்கிரன் பெயர்ச்சி- 30 ஆண்டுகளுக்கு பின் செல்வ செழிப்புடன் வாழப்போகும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ராசி மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று கிரகங்களில் நட்சத்திர மாற்றங்கள் ஏற்படும் பொழுதும் பலன்கள் மாறுகின்றன.
நவகிரகங்களில் சுக்கிரன் முதன்மையானவர்களாக இருக்கிறார். சுக்கிரன் என்றால் காதல், செல்வம் மற்றும் ஆடம்பரம் ஆகியன உள்ளடங்கும்.
ஜோதிட கணிப்புகளின் படி, சூரியன் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசியில் பயணிக்கவுள்ளார். அந்த சமயத்தில் விருச்சிக ராசியில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரங்களும் இணையும். அதே சமயம், நவம்பர் 17-ல் சூரியன், சனியுடன் சேர்ந்து சக்தி வாய்ந்த நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கும்.
ஜோதிடத்தில் சூரியன்- சனி தந்தை மகனாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் பகை உணர்வை கொண்டவர்கள். அப்படியாயின், இந்த பெயர்ச்சியால் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது.
இதன்படி, சனி- சுக்கிரன் பெயர்ச்சியால் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சனி- சுக்கிரன் பெயர்ச்சி

| மீனம் | மீன ராசியில் பிறந்தவர்கள் கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத நன்மைகளை பெறுவார்கள். சுக்கிரன் இந்த காலப்பகுதியில் இவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுப்பார். வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தனியாக இருப்பவர்களுக்கு சரியானதொரு துணை கிடைக்கும். குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை தனிந்து புது வாழ்க்கை வரும். கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் அனைத்து முயற்சிகளும் வெற்றிப் பெறும். |
| விருச்சிகம் | விருச்சிகம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களினால் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையும் மிக மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளன. வியாபாரத்தை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையையும் வராது. |
| மகரம் | மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு அமைதி கிடைக்கும். வணிக வாழ்க்கையில் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைக்கும். முதலீடுகளிலிருந்து வருமானம் கிடைக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். மேலும் அவர்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெரிய உடல்நலப் பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்பு இல்லை. |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).