இரவில் வெளியே துணி காய போடுவது அசுபமா? சாஸ்திரங்களில் மறைக்கப்பட்டிருக்கும் அறிவியல்
பொதுவாக இரவு வேளைகளில் வீட்டில் சில வேலைகள் செய்வதை பெண்கள் தவிர்த்து விட வேண்டும். ஏனெனின் சாஸ்த்திரங்களின்படி,தேவையில்லாத நிறைய பிரச்சினைகள் வீட்டில் வரும்.
அதிலும் குறிப்பாக எதிர்மறையான ஆற்றல்கள் அதிகமாக நடமாடும் இரவு வேளையில் வீட்டில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட பெரிய பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் வீட்டிற்கு வரவிருக்கும் அதிர்ஷ்டம் தடைப்பட்டு, தரித்திரம் தலையோங்கும்.
சிறிய வீடாக இருந்தாலும் ஒரு சிலர் அவ்வளவு சுத்தமாக அழகாக வைத்திருப்பார்கள். அது தான் அவர்களின் வளர்ச்சிக்கான முக்கிய காரணமாகவும் இருக்கும்.
அந்த வகையில், இரவு வேளைகளில் பெண்கள் வீட்டில் செய்யக்கூடாத இரண்டு முக்கிய தவறுகள் என்னென்ன என்பதை பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

வறுமையை உண்ணுபண்ணும் தவறு
அன்னலட்சுமியின் வரம் பெற அன்னத்தை கீழே கொட்டக் கூடாது என வீட்டிலுள்ள பெரியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். சாப்பிடும் பொழுது ஒரு பருக்கைக் கூட சிந்தாமல் சாப்பிட வேண்டும்.
அப்படி கீழே சிந்திக் கொண்டு சாப்பிடும் பொழுது நிறைய கஷ்டங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. நாம் இரவு வேலைகளில் சாப்பாட்டை வெளியில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

சாப்பாட்டை வெளியில் கொட்டும் பொழுது உங்கள் வீட்டில் இருந்த அன்னலட்சுமி வெளியே வாய்ப்பு உள்ளது. இரவில் குப்பை சாப்பாட்டை போடுவதை தவிர்த்து இரவில், பிரிட்ஜில் வைத்து மறுநாள் காலையில் வெளியில் திரியும் விலங்குகளுக்கு கொடுக்கலாம். வீட்டில் வறுமையை உண்டு பண்ணும் இந்த தவறை தவிர்ப்பவர்கள் சுபீட்சமாக வாழ்வார்கள்.
எதிர்மறையான சக்தியின் தாக்கம்
வீடுகளில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் இரவில் துணிகளை வெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி வெளியில், ஈரத்துணியை இரவில் போடும் பொழுது வீட்டில் எதிர்மறையான சக்திகளின் நடமாட்டம் இருக்கும்.
குழந்தைகள் உள்ள வீடுகளாக இருந்தால் வெளியில் சிந்தும் தண்ணீரில் கால் வைத்து விழவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இரவில் ஆடைகளை கழுவதை தவிர்ப்பது நல்லது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |