வெள்ளை சாதம் அதிகமாக சாப்பிடுறீங்களா? உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஜாக்கிரதை
தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதால் உடம்பில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெள்ளை சாதம்
வெள்ளை சாதம் தென்னிந்திய மக்களின் பிரதான உணவாக இருக்கின்றது. ஆம் அரிசி உணவினை அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள் அதனை குறைப்பதற்கு முடியாமல் தவிக்கின்றனர்.
ஒரு நாளைக்கு மூன்று வேளையும் அரிசி சாதம் எடுத்துக் கொள்வதால், அடுத்தடுத்து நாம் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை கீழே தெரிந்து கொள்ளலாம்.

ஆபத்தை ஏற்படுத்தும் வெள்ளை சாதம்
பொதுவாக வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால், இவை உடம்பில் கொழுப்பாக மாறிவிடுகின்றது. இதனால் மூன்று வேளையும் சாதம் எடுத்துக் கொள்வது உடல் எடை அதிகரிக்கும். மேலும் சாதம் சாப்பிடுவதால் அடிக்கடி பசி ஏற்படுவதுடன், எடையும் அதிகரிக்கும்.

இதே போன்று நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதத்தினை அதிகமாக எடுத்துக் கொள்வதால், இதிலுள்ள கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரித்துவிடும். இதனால் நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவே சாதத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளை சாதத்தில் சத்துக்கள் மிகவும் குறைவாக உள்ளது. இவற்றினை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கும். இதனால் இதய பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு பதிலாக சிவப்பு அரிசி சாதத்தினை எடுத்துக் கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள்வெள்ளை சாதத்தினை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் சாதம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் இன்னும் அதிகமாகி ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும்.

தினமும் வெள்ளை சாதத்தினை சாப்பிடுவதால் வளர்சிதை மாற்ற பிரச்சனை ஏற்படும். வளர்சிதை மாற்றத்தை படிப்படியாக குறைக்க ஆரம்பிப்பதுடன், இதனால் உடல் பருமன் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |