வெறும் 10 நிமிடத்தில் இட்லி, தோசை செய்யலாம்! எப்படி தெரியுமா?
இன்றைய அவசரகால உலகில் காலை உணவை தவிர்ப்பதையே பலரும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளோ ஏராளம், காலை உணவை தவிர்த்தாலே எண்ணற்ற நோய்கள் நம்மை அண்டிக்கொள்ளும்.
ஏனெனில் அன்றைய நாளுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதே காலை உணவு தான்.
இந்த பதிவில் வெறும் 10 நிமிடங்களில் சுவையான காலை உணவை தயார் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பொரி- 2 கப்
ரவை- 1 கப்
கெட்டி தயிர்- அரை கப்
தண்ணீர் - முக்கால் கப்
பேக்கிங் சோடா- தேவையான அளவு
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் 2 கப் பொரியை எடுத்துக்கொண்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ரவையையும் அரைத்துக் கொள்ளவும், இரண்டையும் ஒன்றாக கலந்துவிட்டு தயிர் ஊற்றி நன்றாக கிளறவும்.
இந்த கலவையுடன் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
இதனை அப்படியே சுமார் 5 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் தேவையான அளவு உப்பு , பேக்கிங் சோடா சேர்க்கவும்.
அவ்வளவு தான், இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்தால் மென்மையான இட்லி தயாராகிவிடும், இந்த மாவை பயன்படுத்தி மொறு மொறு தோசையும் சுடலாம்!!!