இந்த தவறை இனி செய்யாதீங்க.. ஜீன்ஸ் பேண்டை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கணும்?
பொதுவாக சுகாதாரமாக இருப்பது வெறும் வீட்டை சுத்தம் செய்வது, கழுவது மாத்திரமல்ல, நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக உள்ளாடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், ஜீன்ஸ், போர்வைகள் மற்றும் பல் துலக்கும் பிரஷ் உள்ளிட்ட அனைத்தும் சுத்தமாக இருப்பதை தினமும் உறுதிச் செய்து கொள்ள வேண்டும்.
நாம் அதிகமான நேரம் இது போன்ற பொருட்களுடன் தான் பயணிக்கிறோம். அதனால் அவை சுத்தமாக இல்லாவிட்டால் தினமும் ஒவ்வொரு பிரச்சினைகள் வரலாம்.
இது குறித்து பேசிய மருத்துவர் ஒருவர், வழக்கமாக பயன்படுத்தும் உள்ளாடைகளை ஒவ்வொரு தடவை பயன்படுத்திய பின்னரும் துவைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நீங்கள் தினமும் படுத்துறங்கும் படுக்கை விரிப்புகளை வாரத்திற்கு ஒரு முறை துவைக்க வேண்டும், ஏனெனின் இதிலிருக்கும் பாக்டீரியாக்கள் உங்களின் உடலை தாக்கும்.
அந்த வகையில், இது போன்று வேறு என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர் கூறுகிறார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
அவசியம் செய்ய வேண்டியவை
1. தலையணை உறைகளை 3-4 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் எண்ணெய் சருமம் அல்லது முகப்பரு பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இது போன்ற பிரச்சினையுள்ளவர்களுக்கு சில சமயங்களில் அதிகமாகலாம்.
2. தலையணை உறைகளில் வியர்வை மற்றும் உமிழ்நீர் இருப்பதால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது துவைக்க வேண்டும். மெத்தைகளில் தூசி மற்றும் உடல் எண்ணெய்கள் குவிந்திருக்கும். இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதனை சுத்தம் செய்ய வேண்டும்.
3. தற்போது ஜீன்ஸ் அணிவது பழக்கமாகி விட்டது. யாரை பார்த்தாலும் புதுவிதமான ஸ்டைலில் ஜீன்ஸ் அணிகிறார்கள். அப்படி அணியும் பொழுது 4-5 முறை அணிந்த பின்னர் துவைக்க வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறார். அப்படி இல்லாவிட்டால் துர்நாற்றம் வரலைாம்.
4. துண்டுகளை 2-3 முறை பயன்படுத்திய பின்னர் துவைக்க வேண்டும். ஈரமான துண்டுகள் "கிருமி காந்தமாக" என மருத்துவர் கூறுகிறார். கழுவாமல் துண்டுகளை பயன்படுத்தும் பொழுது சரும பிரச்சினைகள் வரலாம்.
5. பல் துலக்கும் பிரஷ்ஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரஷ் தேய்ந்தவுடன் மாற்றுவது அவசியம். ஏனெனின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் வாய் முதல் இடத்தை பிடிக்கிறது. அதனை ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |