மனிதர்களின் சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு.. அச்சத்தில் அமெரிக்கா- அறிகுறிகளும், பாதிப்புகளும்
அமெரிக்காவில் மனிதர்களின் சதையை சாப்பிட்டு உயிர்வாழும் ஒட்டுண்ணி வகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
புது விதமான நோய்த்தொற்று
மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடோர் நாட்டிற்கு சென்று, அதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவிற்கு திரும்பிய நபருக்கு NWS என்ற தசை திசுக்களை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு NWS என்ற தசை திசுக்களை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று இருப்பது கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடிய நோய் தொற்று அமெரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
விலங்குகளுக்கும் வருமா?
“நியூஸ் வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம்” என்பது கால்நடைகள், வன விலங்குகள், செல்லப்பிராணிகள், பறவைகள் ஆகிய விலங்குகள் மீதுள்ள காயங்களில் முட்டையிடும் ஈ ஆகும்.
இந்த முட்டைகள் நாளடைவில் புழுக்களாக மாறி, உயிருள்ள திசுக்களை சாப்பிட்டு உயிர் வாழும். இதனை புழு தொற்று என மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.
இந்த வகை ஒட்டுண்ணி தொற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில உள்ளது. ஆனால் இது மனிதர்களை தாக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது என கூறப்பட்ட வேலையில் NWS என்ற தசை திசுக்களை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் வழியாக வடக்கு அமெரிக்கா நோக்கி பரவி வருவது விவசாயிகளுக்கு பயத்தை கிளப்பியுள்ளது.
அந்த வகையில், NWS என்ற தசை திசுக்களை உண்ணும் ஒட்டுண்ணி தொற்றை எப்படி தடுக்கலாம்? என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்கலாம்? என்பதை பதிவில் பார்க்கலாம்.
எப்படி கண்டறிவது?
1. NWS என்ற தசை திசுக்களை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது. அதனால் தொற்று பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.
2. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், கால்நடைகள் அதிகமுள்ள இடங்களில் வசிப்பவர்கள், வெளிப்புற காயங்கள் உள்ளவர்களுக்கு இந்த தொற்று வர அதிகமான வாய்ப்பு உள்ளமாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
3. காயம் ஏற்பட்ட இடத்தில் கடுமையான வலி, ஆறாத புண்கள், காயம் ஏற்பட்ட இடத்தில் துர்நாற்றம் வீசுதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
4. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் இருந்தால் அந்த இடத்தை சுற்றி புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏதாவது தென்ப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
5. NWS தொற்றில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் வெப்பம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்லலாம். ஆனால் அதற்கு முன்னர் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தல்களை கேட்டுக் கொள்வது நல்லது.
6. காயங்கள் ஏற்பட்டால் சுத்தமாகவும், பாக்டீரியாக்கள் உள்ளே போகாத வகையில் பராமரிக்க வேண்டும்.
7. உடலில் ஏற்பட்ட புண்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அறுவை சிகிச்சைகள் மூலம் புழுக்களை வெளியேற்றலாம். ஆனால் நீங்கள் கை வைத்தியம் செய்து புழுக்களை வெளியேற்ற முயற்சிப்பது தவறான செயலாகும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அமெரிக்காவில் NWS புழு தொற்று பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |