செரிமான பிரச்சினையா? இதையெல்லா செய்யாதீங்க- ஆபத்து நிச்சயம்!
தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இயந்திர உலகில் 3 வேளைகள் சரியாக சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் இருக்கின்றது.
இதனால் வயிற்று புண், செரிமான பிரச்சினை, பசியின்மை, மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
மேலும் சிலர் வெளியில் செல்லும் போது காணும் இடங்களில் எல்லாம் சாப்பிடுவார்கள்.
இவ்வாறு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை எடுத்து கொள்ளும் போது செரிமானத்தில் சில கோளாறுகள் ஏற்படுகின்றன.
இதனை எப்படி சரிச் செய்யலாம்? அதற்காக என்னென்ன தவறுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம்? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
செரிமான பிரச்சினை
1. நொறுக்குத் தீனிகள், காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். இது தான் செரிமான பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
2. செரிமான கோளாறு இருக்கும் பொழுது திராட்சைப்பழம், அவகேடோ, பெர்ரி, பீச், தக்காளி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. கோதுமை, பழுப்பு அரிசி, ரொட்டி மற்றும் பாஸ்தா ஆகிய உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதனால் செரிமான பிரச்சினைகள் அதிகமாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இதனால் ஒவ்வாமை ஏற்படும்.
4. வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அத்துடன் தக்காளி சட்னி மற்றும் பச்சை மிளகாய் சட்னி சாப்பிட வேண்டாம்.
5. எண்ணெய் நிறைந்த பொருட்களை செரிமான கோளாறுகள் பிரச்சினையுள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். உதாரணமாக பன்னீர், பட்டர் ஆகிய பொருட்கள் கூறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |