பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான போட்டியாளர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
மக்களுக்கு பிடித்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி தமிழ் ,ஹிந்தி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெற்றிநடை போட்டு வருகின்றது. தமிழில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
தப்பு பண்லனா எதுக்கு மன்னிப்பு கேட்கனும் –பிரதீப்பை சாடிய ஐசுவிற்கு பதிலடிக் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்!
தமிழில் வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7 ஆவது சீசன் வெற்றி நடை போட்டு வருகின்றது. 7 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.
ஹிந்தியில் பிக்பாஸ் இதுவரை 16 சீசன்களை கடந்த தற்போது 17வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் 17' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கிதா லோகாண்டே என்ற போட்டியாளர் தனது மாதவிடாய் காலத்தை தவறவிட்டதாகவும், கர்ப்ப பரிசோதனை செய்ததாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
புளிப்புச் சாப்பாடு சாப்பிட ஆசைப்பட்டதாக நடிகை கூறியது போன்ற புதிய ப்ரோமோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டதிலிருந்து அனைவரின் மனதிலும் இந்த கேள்வியிருந்தது.
அங்கிதா லோகாண்டே ஒரு இந்தி திரைப்பட நடிகை ஆவார். சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட தோனி பட புகழ் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளதுடன் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |