உன் பொண்டாட்டியா நான்? நடுரோட்டில் சண்டையிட்ட நடிகை! பார்த்திபன், ரேகா அளித்த விளக்கம் இதோ
நடிகை ரேகா நாயர் பயில்வான் ரங்க நாதனை இன்று சரமாரியாக திட்டி வெளியான காணொளி ரசிகர்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இரவின் நிழல்
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான திரைப்படம் இரவின் நிழல். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை ரேகா நாயர் ஒரு காட்சியில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்திருந்தார்.
இதில் எந்த கதாபாத்திரமும் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆபாசமாக இல்லை என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு ரேகா நாயரும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
பயில்வான் ரங்கநாதன்
இந்நிலையில் நடிகைகளைக் குறித்து சர்ச்சையான விமர்சனங்களை வைக்கும் பயில்வான், ரேகா நாயரின் நிர்வாண நடிப்பையும் குறித்து மோசமாக பேசி காணொளி வெளியிட்டிருந்தார்.
இதனால் கடுப்பான ரேகா நாயர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பயில்வானை எதார்த்தமாக நடைபயிற்சி சென்ற இடத்தில் அவதானித்து அவரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் தான் அணிந்துவந்த டீ சர்ட்டையே கழற்ற சென்ற ரேகாவை பார்த்த, பயில்வான் பின்பு ஒதுங்கி சென்றுள்ளார்.
இதுகுறித்து பயில்வான் கூறுகையில், இரவின் நிழல் படத்தின் ப்ரொமோஷனுக்கு நடிகர் பார்த்திபன் அனுப்பியிருப்பார் என்று கூறி குற்றச்சாட்டை வைத்தார்.
பார்த்திபனின் பதில்
இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், நடிகைகள் தனிப்பட்டு கொடுக்கும் பேட்டிக்கு நான் பொறுப்பு ஆகமுடியாது என்றும் தான் இருக்கும் அதிகமான வேலையில் இவ்வாறு ப்ரொமோஷனுக்கு அனுப்பிவிட்டுள்ளேன் என்று நீங்கள் கூறுவது தவறு.
தான் அவ்வாறு எந்தவொரு ப்ரொமோஷன் செய்யவில்லை என்றும் பயில்வானின் பேச்சைக் கேட்டு வருத்தமும் பார்த்திபன் அடைந்துள்ளார்.
ரேகா நாயர் விளக்கம்
தான் ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. ரோட்ல பார்த்தா நான் அவரை அடிப்பேன். அப்போ யாரும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு காவல் துறையிடமே கூறி வந்துள்ளார்.
அதே போன்று ஏதேச்சையா பீச்ல பார்த்தேன். அதுனால நான் போய் கேட்டேன். இவ்வாறு தன்னுடைய விளக்கத்தை கூறியுள்ளார் ரேகா நாயர்.