இடியாப்பம் செய்றீங்களா? அப்போ இந்த தக்காளி குருமாவையும் சேத்து செய்ங்க!
நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக தக்காளி உள்ளது. இந்த தக்காளியை விதவிதமான முறையில் சமைத்து சாப்பிட்டு இருப்போம்.
தவிர, பல வகை சைடிஷ்சும் செய்து ருசித்திருப்போம். அந்த வகையில் தக்காளியில் அருமையான குருமா எப்படி தாயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
இந்த டேஸ்டியான தக்காளி குருமா இட்லி தோசை பூரி சப்பாத்தி, இடியப்பம் போன்ற உணவுகளுக்கு சூப்பரான சைடிஷ். இப்போது இதற்கான எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்.
படி – 1
- தேங்காய் துருவல் – 1/2 முடி
- பழுத்த பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- பட்டை – 1, லவங்கம் – 1 சோம்பு – 1/2 ஸ்பூன்
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 4 பல்
- முந்திரிப்பருப்பு – 4
- பொட்டுக்கடலை – 1/2 ஸ்பூன்
இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் இட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
படி –2
- எண்ணெய் – 3 டேபிள்
- ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன்
- பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை
- சின்ன வெங்காயம் – 15 பல் (பொடியாக நறுக்கியது)
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்துக்கொள்ளவும். பின்னர் முன்பு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்த விழுதை வெங்காயத்தோடு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இதன் பிறகு,
மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா – 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
அவை நன்கு கொதித்து வந்த பின்னர் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறிவும்.