பாக்கியா கேட்ரிங்கிற்கு சாப்பாடு சப்ளை செய்யும் கோபி! இன்ஸ்டாவில் லீக்கான புகைப்படம்
கேட்ரிங்கிற்கு சாப்பாடு சப்ளை செய்யும் பாக்கியலட்சுமி கோபியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகிய “ஸ்ரீமோயி” என்ற சீரியலின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பாக்கியலட்சுமி சீரியலின் வசனங்கள் மற்றும் கதையம்சங்களை லீனா மற்றும் சங்கீதா என இரண்டு பேர் கவனித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜுலை 27ம் திகதி பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் 2 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சதீஸ் என்கிற கோபி சீரியலில் இருந்து விடைப்பெறபோவதாக தெரியவந்துள்ளது.
சாப்பாடு சப்ளை செய்யும் கோபி
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோபி தினம் தினம் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் கேட்ரிங்கிற்கு சாப்பாடு சப்ளை செய்வது போல் புதிய புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.
அதனை பார்க்கும் போது கோபி மீண்டும் ராதிகாவை விட்டுட்டு பாக்கியாவுடன் இணைந்து விடுவார் என தெரிகின்றது. இதனை தான் ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.