மருமகளுடன் இணைந்து குத்தாட்டம் போடும் பாக்கியா! வியப்பில் நெட்டிசன்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பாக்கியாவின் நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பை பெற்றாலும் தற்போது ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முதல் இடத்தை பிடிக்கிறது. மேலும் இந்த சீரியலில் சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
இதில் பாக்கியா வேடத்தில் நடிக்கும் சுசித்ராவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் முக்கிய வரவேற்பை பெற்றுள்ளது.
மாமியாரும் மருமகளும்
இந்நிலையில் சுசித்ராவுடன் மற்றும் அமிர்தா கேரக்டரில் நடிக்கும் ரித்திகா ஆகிய இருவரும் இணைந்து நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் மாமியாருடன் இணைந்து மருமகள் அடிக்கும் கூத்தை பாருங்கள் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.