அஜித்துக்கு ஆறுதல் சொன்ன விஜய்! புகைப்படம் வெளியாகாமல் இருப்பதற்கு இது தான் காரணம்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் தான் விஜய், அஜித். இவர்கள் இருவருக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அஜித், விஜய் இருவருக்கும் சினிமாவைத் தவிர உயிரைக் கொடுக்கும் அளவிற்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை.
அஜித்தை சந்திக்க சென்ற விஜய்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அஜித்குமாரின் அப்பா பி.சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எனப்பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பிலாவது இவர்கள் இருவரின் புகைப்படங்கள் சிக்கும் என எதிர்பார்த்துக் காந்திருந்தார்கள்.
இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், துக்கம் விசாரிக்க சென்ற விஜய்யின் கார் மட்டுமே புகைப்படத்தில் வெளியாகியிருந்தது. இப்படி வெளியாகமால் போனதற்கு காரணம் என்னவென்றால் அஜித் வீட்டிற்கு செல்வதற்கு முன்னரே விஜய் ஒரு கண்டிசன் போட்டாராம்.
அது என்னவென்றால் அஜித்தை சந்திக்கவிருப்பதை பப்ளிசிட்டியாக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விஜய் அஜித் வீட்டிற்கு செல்வதைக் கண்டால் ரசிகர்கள் எல்லாம் ஒன்றுக் கூடி விடுவார்கள் அது அஜித்திற்கு வருத்தத்தைக் கொடுக்கும் அதனால் தான் சத்தமில்லாமல் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியிருக்கிறார் விஜய்.