கலங்கி நின்ற அஜித்! நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்
நடிகர் அஜித்தின் தந்தை உயிரிழந்த நிலையில், நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
அஜித்
தென்னிந்திய சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் நடிகர் அஜித். இவரது தந்தை மணி என்கிற சுப்ரமணி இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்ட அஜித்தின் தந்தைக்கு தற்போது 85 வயதாகியுள்ள நிலையில், இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தந்தையாரின் இறுதிச்சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்பிய அஜித்தின் குடும்பத்தினர், இரங்கல் தெரிவிக்க நினைப்பவர்கள் Psmanifamily@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
அஜித்தின் தந்தை இறப்பிற்கு திரையுலகங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், நடிகர் விஜய்யும் நேரில் சென்று அஞ்சலி செய்துள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு தனது மேலாளர் புசி ஆனந்த் காரில் சென்று சென்று அஜித்திற்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்@actorvijay #AjithKumar #Vijay #ThalapathyVijay #ThalaThalapathy pic.twitter.com/7C5wGbLtEJ
— Siga (@SigaJourno) March 24, 2023