நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்!
பிரபல தமிழ் நடிகரான அஜித் குமாரின் தந்தை இன்று அதிகாலை காலமானார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சினிமா மட்டுமின்றி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட பல துறைகளிலும் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது தந்தை பி.சுப்ரமணியம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் காலமானார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அஜித்தின் தந்தை மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரின் இறுதிச்சடங்குகள் காலை 10 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தந்தையாரின் மரணத்தை குறித்து அஜித் குடும்பத்தினர் சார்பில் டுவிட்டர் பதிவொன்று பகிரப்பட்டுள்ளது.
அதில், எங்களது தந்தையாரின் இறுதி சடங்கு தனிப்பட்ட முறையில் எங்களுடைய வீட்டில் நடைப்பெற இருக்கிறது. எனவே தயவு செய்து உங்களது வீடுகளிலிருந்து எங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறோம்.” என குறி்ப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
— Suresh Chandra (@SureshChandraa) March 24, 2023