உண்மையான பார்பி பொம்மை போல மாறிய பெண்: எவ்வளவு செலவு செய்திருக்கிறார் தெரியுமா?
பொதுவாகவே எல்லோருக்கும் பொம்மைகள் என்றால் பிடித்தமான ஒன்றுதான் ஆனால் ஒரு பெண் உண்மையாகவே நிறைய பணம் செலவழித்து மாறியிருக்கிறார்.
பார்பி பொம்மையாக மாறிய பெண்
அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ஃபாரெஸ்ட் என்ற 25வயதுடைய பெண்ணொருவர் தன் "நிஜ வாழ்க்கை பார்பி இளவரசி" போல ஆக வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்.
பொம்மைப் போல தோற்றமளிக்க இவர் $1,00,000 (தோராயமாக ரூ. 82,67,900) செலவு செய்திருக்கிறார்.
பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஒப்பனை செயல்முறைகளை மேற்கொண்டு தன்னைத் தான் விரும்பியபடி மாற்றிக்கொண்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் விடுமுறையில் இருந்தபோது, மார்பகப் பெருக்குதல் என்ற தனது முதல் செயல்முறையை மேற்கொண்டபோது அவருக்கு வெறும் 18 வயதுதான் இருந்தது. அதன்பிறகு 24 வயதில் இரண்டாவது முறையாக இந்தச் சிகிச்சையை மீண்டும் செய்துக் கொண்டுள்ளார்.
இந்தப் பெண் கை, வயிறு , முதுகு, கன்னம், தொடை என பல பகுதிகளுக்கு சிகிச்சை செய்தததுடன், பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையும் செய்திருக்கிறார்.