லட்சக்கணக்கில் செலவு செய்து நாயாகவே மாறிய நபர் - ஏன் தெரியுமா? வாயடைத்துபோன குடும்பத்தினர்கள்
உலகில் பிறந்த பலருக்கும் பல விதமான ஆசைகள் இருக்கும். சிலருக்கு அந்த ஆசை நிறைவேறலாம். பலருக்கு அவை கனவாகவே இருக்கலாம்.
ஆனால், இங்கு நபர் ஒருவரின் வித்தியாசமான ஆசை ஒன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ஐப்பானை சேர்ந்த டோகோ என்ற நபர் நாயாக மாறியுள்ள சம்பவம் தான் பெரும் ஆச்சரியமே.
நாயாக மாற ஆசை
ஆம், அவர் சிறிய வயதில் இருந்தே விலங்குகளின் வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், அவர் தோற்றத்தை மாற்ற 11 இலட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறார். இதற்காக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வொர்க்ஷாப் Zeppet என்ற நிறுவனத்தை அணுகி தோற்றத்தை மாற்றியுள்ளார்.
இவரை அவரது குடும்பத்தினர்கள் கூட கண்டுப்பிடிக்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு மிக தத்ரூபமாக மாற்றியுள்ளனர்.
இந்திய அணியில் சஞ்சு சாம்சனை புறக்கணிப்பது ஏன்?
நாய் ஆடை தயாரிக்க 40 நாட்கள்
மேலும், மனிதருக்கும் நாய்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதால், டோகோ ஆடையை உருவாக்க அதிக முயச்சித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டோகோவின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய, செயற்கை ரோமங்கள் பட்டறையில் பயன்படுத்தப்பட்டன. 40 நாட்களுக்குப் பிறகு, இந்த ஆடை தயாராகியது. இதைத் தொடர்ந்து டோகோ அதை அணிந்து தனது படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.