மனைவி மஹாவை அணைத்தபடி ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம்! மாறி மாறி காதலை வெளிப்படுத்தும் ஜோடி
புதுமணத் தம்திகளான ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் மாறி மாறி இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டு தங்களது காதலை வெளிப்டுத்தி வருகின்றனர்.
ரவீந்தர் மகாலட்சுமி
சில தினங்கள் முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை, லிப்ரா புரொடக்ஷன் தயாரி்ப்பாளர் ரவீந்தர் திருமணம் செய்துள்ளார்.
தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வரும் இவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த காதல் திருமண தம்பதிகள் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்லாமல் மகாபலிபுரம் ரிசார்ட் ஒன்றில் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் வனிதா இவர்களின் திருமணத்திற்கு மறைமுகமாக கருத்து ஒன்றினை பதிவிட்டது வைரலாகி வருகின்றது.
இவர்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், பலரும் இவர்களை கிண்டல் செய்து வருகின்றனர்.
மாறி மாறி காதல் பதிவு
ஆனால் எந்தவொரு பதிவினையும் கண்டுகொள்ளாத குறித்த ஜோடி தங்களது காதலை மாறி மாறி வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டிருக்கும் ரவீந்தர், “வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்ததாக இருந்தால், கடவுள் உங்களுக்காக ஒருவரை அனுப்புவார்... எனக்கு கிடைத்துவிட்டது... டன்சோ மூலம் பெற்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.