‘கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க’... ரவீந்தர் திருமண சர்ச்சை! காஜல் கொடுத்த பதிலடி
தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி திருமணத்தை விமர்சித்தவர்களுக்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பதிலடி கொடுத்துள்ளார்.
ரவீந்தர் மகாலட்சுமி
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒருபுறம் வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபுறம் ட்ரோல்களும் செய்யப்பட்டு வருகின்றது. ஆம் மகாலட்சுமி காசுக்காக ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டை வைத்தனர்.
இதற்கு இருவரும் இணைந்து அட்டகாசமான பதிலை கொடுத்துள்ளனர் காதல் தம்பதிகள்.
பிக்பாஸ் காஜல் பதிலடி
இந்நிலையில், ரவீந்தர் திருமணத்தை விமர்சித்தவர்களுக்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பதிலடி கொடுத்துள்ளார்.
அதன்படி மகாலட்சுமி - ரவீந்தர் திருமணத்தை ட்ரோல் செய்தவர்களின் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல்.
அதில் ஒருவர், “என்னடா கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க... பணம் பண்ற வேலை” என குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், மனசை மனிபர்ஸுகுள்ள ஒழிச்சி வெச்சிருக்காங்களா என ஒரு பெண் பதிவிட்டதை பார்த்து கடுப்பான காஜல், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“அது எப்டிங்க... நயன் விக்னேஷ கட்டிக்கிட்டாலும் நயன் தான் தப்பு. மஹா ரவிய கட்டிக்கிட்டாலும் மஹா தான் தப்பு. என்ன ஒரு ஆம்பள புத்தி” என விளாசியுள்ளார். காஜலின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.