சமந்தா பாணியில் விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி
சமந்தா பாணியில் த்ரிஷா- விஜய் திருமணம் நடைபெறவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளதாக பாடகி சுசித்ரா கொடுத்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விஜய் - த்ரிஷாவுக்கு திருமணமா?
தற்போது விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையால் இணையமே போர்களமாக மாறியுள்ளது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்திருந்தார்.
குறித்த விடயம் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தியுள்ளதாக விஜய் ரசிகர்களில் ஒருசாரார் உட்பட நெட்டிசென்கள் கொந்தளித்து வருகின்றார்கள்.

இந்நிலையில்,சமந்தா பாணியில் த்ரிஷா- விஜய் திருமணம் நடைபெறவிருப்பதாக பாடகி சுசித்ரா கொடுத்துள்ள பேட்டி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடிணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |