விஜய் தேவரகொண்டா திருமண விருந்து பட்டியல்..இதெல்லாம் இருக்கா?
நடிகை ரஷ்மிகா மந்தானாவும் விஜய் தேவர்கொண்டாவும் மிக சிறப்பாக திருமணம் செய்து கொண்டனர். இதில் அவர்கள் கல்யான விருந்து பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரஷ்மிகா மந்தானா விஜய் தேவர் கொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஒன்றாக சேர்ந்து பல படங்கள் நடித்துள்ளனர். அவை அனைத்தும் சிறப்பான வெற்றிகளை தந்ததில் இருந்து ரசிகர்களும் இவர்களை வரவேற்றனர்.
இவர்கள் நிஜத்தில் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களையும் பதிவிட்டு வந்தனர். இப்படி இருக்க நடிகர் விஜய் தேவர் கொண்டாவிற்கும் ரஷ்மிகா மந்தானாவிற்கும் கடந்த மாதம் 26ம் திகதி சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது.

இவர்கள் இருவரும் திருமணம் நடக்கும் வரையில் எந்த விதமான தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை.
ஆனால் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு Virosh திருமணம் என்று கூறி தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் நன்றியும் தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்க இவர்களுடைய திருமணத்தில் என்ன விருந்து போடப்பட்டது என்பதற்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

விருந்து லிஸ்ட்
இந்நிலையில் இவர்களது திருமணத்தில் பரிமாறப்பட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, 'தெலங்கானா மட்டன் பிரியாணி, ஹைதராபாத் தம் பிரியாணி, பன்றி கறி, நாட்டுக்கொழி குழம்பு, புளி ரசம், கர்நாடகா பிசிபலே பாத், மைசூ பாக்' போன்ற உணவுகள் திருமணத்தி்ல் பங்கு பற்றியவர்களுக்கு கொடுக்கபட்டது.

குடகு பகுதியை சேர்ந்த மக்கள் பன்றி கறி என்றால் விரும்பி சாப்பிடுவார்களாம். நடிகை ரஷ்மிகா மந்தானாவிற்கும் பன்றி கறி என்றால் மிகவும் பிடிக்குமாம்.
எனவே ராஷ்மிகா சார்ந்திருக்கும் குடகு கலாசாரத்தை மதிக்கும் வகையில் பன்றி கறி விருந்தும் திருமணத்தில் போடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |