நுரையீரல் தொற்றால் மூச்சு விட முடியாமல் நிதி உதவி கேட்கும் நடிகை
பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் சந்தியாவின் அம்மாவாக நடித்தவர் தான் காதல் மல்லேஸ்வரி.
நுரையீரல் தொற்று
பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் நடித்தவர் தான் மல்லேஸ்வரி.
இவர் தற்போது உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர் தற்போது நிதி உதவி கேட்டு காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

‘காதல்’ திரைப்படத்தில் சந்தியாவின் தாயாராக இவர் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரம் மூலம் இவர் பிரபலமும் அடைந்தார். தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துவந்த இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு சொந்தம் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாத காரணத்தினால் இவர் தன்னுடைய மருத்துவ செலவிற்காக சினிமாத்துறையிடம் உதவி கேட்டுள்ளார்.

காணொளி
அவர் அந்த காணொளியில் “என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி எனச் சினிமாவில் அழைப்பார்கள். 'காதல்' படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நான் நடித்திருந்தேன்.
இதுவரை நான் தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்திருக்கிறேன். கவுண்டமணி, செந்தில் சாருடனும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
எனக்கு இப்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டிற்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறேன். அதனால் உங்களால் முடிந்த உதவியை எனக்காகச் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |