சினிமாவில் மட்டுமல்ல...! கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ராம்சரண்! சொத்து மதிப்பைக் கேட்டால் வாயடைத்துப் போவீர்கள்
நடிகர் ராம்சரண் சினிமாவில் மட்டும் இல்லாமல் இன்னும் பல தொழில்கள் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் தெரியுமா?
நடிகர் ராம்சரண்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ராம்சரண். இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் தான். இவர் 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் 11 ஆண்டுகள் குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்து தற்போது தங்களின் முதல் குழந்தைகளுக்காக காத்திருக்கிறார்கள்.
இவர் தனது சினிமாத்துறையில் 2007ஆம் ஆண்டு அறிமுகமானவர் தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடம்பிடித்துக் கொண்டார் அதற்கு சான்றாக கடந்த வருடம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளி குவித்தது.
மேலும், இந்த திரைப்படம் பல விருதுகளை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் இடம் பெற்ற நாட்டுக் கூத்து பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பாடல் அண்மையில் ஒஸ்கார் விருதுகளைப் பெற்று பெருமைப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோடிக்கணக்கில் சம்பாத்தியம்
ராம்சரணின் சொத்து மதிப்பு ரூ.1300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஐதராபாத்தில் 25000 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட வீட்டில் ராம்சரண் வசித்து வருகிறார்.
இந்த வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி இருக்கும் என கணிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகர் ராம்சரண் சினிமாப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி விளம்பரங்கள் மூலமும் பலகோடி சம்பாதித்து வருகிறார்.
இவர் மொத்தம் 34 பிராண்டுகளின் விளம்பர தூதராக இருந்து வருகிறார். சுமார் ஒரு விளம்பரத்திற்கு இவர் ரூ.1.8 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இவருக்கு கார்களின் மீது அலாதி ப்ரியம் என்பதால் ஆடி மார்ட்டின் வி8 வான்டேஜ், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், ரேஞ்ச் ரோவர், ஆஸ்டன் மார்ட்டின், ஃபெராரி போர்டோபினோ போன்ற பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.
இதேபோல் இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுதவிர டுரூஜெட் என்கிற விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.