ஆண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையின் சிறப்பு சேமிப்பு திட்டம்! எப்படி தொடங்கலாம்?
குழந்தை பெற்றவுடனே அவர்களின் எதிர்கால கனவுகளை பற்றி பெற்றோர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிடுகின்றனர். ஏனென்றால் குழந்தை பிறந்ததில் இருந்தே, குழந்தையை பள்ளியில் சேர்பதில் இருந்து அவர்களை பாதுகாப்பாகவும் வளர்க்கள் செலவுகள் அதிகமாகிவிடும்.
இதற்கு சேமிப்பு மட்டுமே செய்தால் போதாது, அதற்கான சில சேமிப்பு திட்டங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று. ஆண் குழந்தைக்களுக்காகவே பொன்மகன் சேமிப்பு திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தின் மூலம் வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்ட்க்ஹை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். மேலும், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும் இந்த திட்டத்திற்கான வட்டி 8.1 வீதம் ஆகும்.,
ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மாறும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில், கணக்கு திறந்த பிறகு அந்தக் கணக்கை தமிழகமும் முழுவதும் அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.
மேலும், குழந்தைக்கு 10 வயதிற்கு மேல் இருந்தால் அந்தக் குழந்தையின் பெயரிலேயே சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு குறைவாக இருந்தால் இணைப்பு கணக்கு (joint account) தொடங்க வேண்டும்.
பெற்றோர் பெயரிலும் குழந்தை பெயரிலும் சேர்த்து கணக்கு தொடங்க வேண்டும்.
இதற்கான தகவலை பற்றி தபால் நிலையத்திலே அல்லது இணைய வெப்சைட்டில் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.