சொந்த தங்கையை காதல் திருமணம் செய்துக் கொண்ட அண்ணன்: 13 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்த உண்மை!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கை திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் - தங்கை திருமணம்
அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதிகள் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் உண்மையில் அண்ணன் தங்கை என அறிந்ததையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் திருமணம் செய்து 10 ஆண்டுகளாகின்றது. மேலும் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
ஆனால் தற்போது இவர்கள் இருவரும் இரத்த சொந்த உறவுகள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அப்பெண் தெரிவித்ததாவது,
நானும் அவரும் காதலிக்க தொடங்கிய போது எங்களுக்கு ஒரே குடும்ப பெயர் இருந்தது. நாங்கள் உறவினர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது, ஆனால், இருவரும் உறவினர்கள் இல்லை என உறுதியாக நம்பி தான் திருமணம் செய்து கொண்டோம்.
ஆனால் தற்போது அண்ணன், தங்கை உறவு என தெரியவந்தது என கூறினார். மேலும் இவர்கள் இருவருக்கும் தந்தை ஒருவரே என தெரியவந்துள்ளது.
இந்த தகவல் சமூகவலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகின்ற நிலையில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.