தனலெட்சுமியின் சூழ்ச்சியால் சிறைக்குச் சென்ற போட்டியாளர்! மீண்டும் பிக் பாஸில் சலசலப்பு..
பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் தனலெட்சுமி ராமின் உடல்நிலையை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
பிக் பாஸின் தற்போதைய நிலைப்பாடு
பிக் பாஸ் சீசன் 6 தற்போது விறவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த சீசன் ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் சண்டைகள் இடம்பெற்று வருகிறது.
தவறான வார்த்தை பிரயோகம்
இந்நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் தேவையற்ற போட்டியாளரை தெரிவு செய்கையில் தனலெட்சுமி ராமிற்கு கண் தெரியாததை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
இதன்போது ராம் கோபமுற்று “என்னை நீ தெரிவு செய்தது குறித்து கவலையடைவில்லை. ஆனால் என்னுடைய உடல்நிலையை சுட்டிக்காட்டி பேசாதே” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் ராமை சிறைக்குள் அனுப்பியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரொமோ வெளிவந்துள்ளது.