தனலெட்சுமியிடம் வாயை கொடுத்து வசமாக சிக்கிய போட்டியாளர்! தரமான சம்பவம்..
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் ஒருவரான அசல் கோளாறு விவகாரம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த போட்டியில் முக்கிய போட்டியாளராக ஜனனி, ஜிபி முத்து, தனலெட்சுமி மற்றும் அசல் கோளாறு காணப்படுகின்றனர்.
இதிலுள்ள 21 போட்டியாளர்களில் கிட்டத்தட்ட 8 நபர்களுக்கு மேல் இந்த வார எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இறுதியாக எலிமினேஷனாகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் இதுவரை வெளியாகவில்லை.
சிலுமிசங்கள்
இந்நிலையில் அசல் கோளாறுவின் சில்மிஷங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் ரசிகர்கள் கடும் கொந்தளிப்புடன் இருந்து வருகிறார்கள். தொடர்ந்து நேற்றைய தினம் தனலெட்சுமிடம் தகாத வார்த்தைகளால் பேசி சண்டை பிடித்துள்ளார்.
இதனால் கடுப்பான தனலெட்சுமி அசலை போட்டு வறுத்தெடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதனை பார்க்கும் ரசிகர்களும் தனலெட்சுமிக்கு சார்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.