சட்டசபையில் வாய் திறந்த முதல்வர் விஜய்... ஆதரவாக ரஜினிகாந்த் பேசியது என்ன?
நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்ட நிலையில், இவர் பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருந்துவரும் ரஜினிகாந்த், தற்போது 173வது படத்திற்கு தர்மன் என்று அறிக்கப்பட்டுள்ளது.
இதன் ஃபஸ்ட் லுக் போஸ் விழா நேற்றை சென்னையில் நடைபெற்றது. ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படத்தினை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தர்மன் படத்தினை இயக்குவது கே.எஸ், ரவிகுமார், சிபி சக்கரவர்த்தி என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இதனை தயாரிக்கும் நிலையில், இயக்குனர் ஷங்க வில்லன் கதாபாத்திரத்திலும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் நேற்றை தினம் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது முதல்வர் விஜய்யை ஒப்பிட்டு ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

விழாவில் பேசியது என்ன?
நாம் பேசாமாலேயே இருந்தால், வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கியா என்பார்கள். பேச ஆரம்பித்தால் இப்போ பேசு என்பார்கள்.
பேசினால் நீ பேசாமலேயே இருந்திருக்கலாம் என்று கூறுவார்கள். உஷாராக இருக்க வேண்டும். நம்மை பிடிக்காதவர்களுக்கு என்ன செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடிக்கும் என்பதால் நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பதும் முட்டாள் தனம் என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு விவாத பொருளாகி வருகின்றது. அதாவது சட்டசபையில் முதல்வர் பேசாமல் இருந்ததற்கு எதிர்கட்சிகள் வாயை திறங்க சிஎம் சார் என்றதும், பின்பு முதல்வர் பேசியது சர்ச்சையாகியதும் அனைவருக்கும் தெரிந்ததே.
தற்போது ரஜினிகாந்த் விஜய்க்கு ஆதரவராகவும், அறிவுரையும் கூறியுள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதுவே தேர்தலுக்கு முன்பு, நடிகர் பின்னால் இளைஞர்கள் செல்வது ஆபத்து என்று ரஜினி பேசியது விஜய்க்கு எதிராக பேசியதாகவும், திமுக-விற்கு ஆதரவாக பேசியதாக கூறப்பட்டது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |