விஜய் சொன்ன குட்டிக்கதை.. இன்பநிதியின் சர்ச்சையான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கூறிய குட்டி கதைக்கு உதயநிதியின் மகன் தனது இன்ஸ்டா பதிவில் ஸ்டோரி ஒன்றினை பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் குட்டி ஸ்டோரி
தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சி தலைவர் உதயநிதி முதல்வரருக்கு எதிராக பல கருத்துக்களை வைத்துள்ளார்.
இதற்கு நேற்றைய தினம் முதல்வர் பதிலளித்துள்ளார். ஆரம்ப பேச்சிலேயே திமுக உறுப்பினர் சட்டசபையை விட்டு வெளியேறிய நிலையில், முதல்வர் தனது உரையை முடிக்காமல் தொடர்ந்து பேசினார்.

அப்பொழுது தனது பாணியில் உங்க அப்பாவை காணவில்லை என்று குட்டி கதை ஒன்றினை கூறினார். இந்த கதையை தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி அப்பா இல்லாமல் தனித்து நிற்பதையும், அவரை அவர் தேடுவதாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
முதல்வரின் இந்த கதைக்கு உதயநிதி வெளியே வந்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவரை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் அவரது மகன் இன்பன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தந்தை உதயநிதி கொடுத்த பதிலை வைத்து பின்னே கல்யாணம் தான் கட்டிக்கிட்டு செட்டப்பையும் வச்சுக்கிட்டு என்ற பாடலை ஒலிக்க வைத்துள்ளார்.
இன்பனின் இந்த பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவெக கட்சியினர் கடுமையாக கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |