பத்மஸ்ரீ விருது பெற்ற மாதவன்... GDN படக்குழு வாழ்த்து
நடிகர் மாதவன் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ள நிலையில், GDN படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், பான் இந்தியா ஸ்டாராக வலம்வரும் மாதவன், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கரங்களால் பெற்றுள்ளார்.
கலை, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை போன்ற துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றது.
இந்த விருதுகளில் பத்ம விபூஷன், பத்ம் பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப்படும் நிலையில், இதனை இந்திய குடியரசு தலைவர் வழங்கி கௌரவிப்பார்.

இந்நிலையில் இந்த ஆண்டு 5 பத்ம விபூஷன், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்ம- என 131 விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக கடந்த மாதம் 66 விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் 2ம் கட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில் 35 விருதுகள் வழங்கப்ப்ட நிலையில், நடிகர் மாதவன் பத்மஸ்ரீ விருது வாங்கியுள்ளார்.

இந்நிலையில் மாதவன் நடித்து வரும் ஜி.டி.நாயுடுவின் பயோபிக் படத்தின் படக்குழு நடிகர் மாதவனை வாழ்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கும் மாதவன் தேசிய விருது வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |