புது சந்தியா வர இதுதான் காரணமாம்! வாய் விட்டு உண்மையை ஒப்புக் கொண்ட பிரபலம்
ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகிக்கு முறையான காம்பினிகேஷன் இல்லாத காரணத்தால் தான் சீரியலை விட்டு விலக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜா ராணி 2 சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி 2.
இந்த சீரியலில் முதலாம் பாகத்தில் ஆல்யா மானசாவும் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். ராஜா ராணி முதலாம் பாகத்தில் ஜோடிகளாக நடித்து, தற்போது நிஜ ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.
ராஜா ராணி சீரியலின் முதலாம் பாகம் குடும்ப வாழ்கை என்றால் எப்படி இருக்கும் என்பதை கருவாக வைத்து நகர்த்திருந்தார். ஆனால் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் குடும்ப வாழ்க்கையுடன் இணைந்து ஜ.பி.எஸ் அதிகாரியாகவும் கதைக்கரு சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் சித்துவுக்கு துணையாக ஆல்யா மானசா நடித்த நிலையில், இரண்டாவது குழந்தை கிடைக்கயிருக்கவும் சீரியலை விட்டு விலகி விட்டார்.
அந்த இடத்தை நடிகை ரியா வந்து நிரப்பினார், மக்கள் சந்தியாவாக ரியாவை ஏற்றுக் கொள்ளும் போது திடீரென சீரியலை விட்டு விலக்கியுள்ளார்கள்.
இதனால் ரசிகர்கள் ரியாவிற்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தார்கள்.
கதாநாயகி மாற்றத்திற்கு இது தான் காரணம்
இந்த நிலையில் பிரபல ஊடகமொன்று ரியாவிற்கு அழைப்பு தொடுத்து, “ ரியா ஏன் நீங்க ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியது குறித்து கேட்டுள்ளார்கள்.
அப்போது ரியா, “ நான் சீரியலை விட்டு விலகவில்லை. நான் சிற்கு காலத்திற்கு முன்னர் வெளி நாட்டிற்கு செல்வேன் என கூறினேன். அதற்கு இயக்குநரும் சரி என்று கூறினார்.
எனக்கு ஒரே மாதத்தில் 15 முதல் 30 வரையிலான காலத்தில் தான் ஷீட்டிங் இருக்கும். மேலும் சீரியலில் கதாநாயகி மாற்றம் குறித்து எனக்கு கூறவில்லை.
இந்த விடயம் குறித்து விளக்கம் கேட்டதற்கு “கம்யூனிகேஷன்” சரியில்லை என பதிலளித்தார்கள். இந்த விடயத்தை நான் யாரிடமும் கூறவில்லை.” எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரியா ரசிகர்கள், “சீரியல் குறித்து தவறான முடிவு எடுத்து விட்டார்கள்.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.