தினமும் உலர் திராட்சை சாப்பிடலாமா? பயன்கள் என்னென்ன?
Don't judge a book by its cover என்ற பழமொழி ஆங்கிலத்தில் உண்டு, இதற்கு ஏற்ற ஓர் உதாரணம் தான் உலர் திராட்சை அல்லது ரைசின் (Raisin).
உலகின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உலர் திராட்சையில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இன்னும் பல உடலுக்கு சத்துக்களை அள்ளிக்கொடுக்ககூடிய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
ஒருநாளில் எந்த வேளையிலும் இதனை நீங்கள் உட்கொள்ளும்போது அபரிமிதமான பலன்களை பெற முடியும்.
165கிராம் உலர் திராட்சையில்,
கலோரிகள்- 508
புரோட்டீன்- 3.0 கிராம்
கொழுப்பு- 05.கிராம்
கார்போஹைட்ரேட்- 123.1கிராம்
நார்ச்சத்து- 11.2கிராம்
கால்சியம்- 40.60 கிராம்
இரும்புசத்து- 3.76மில்லிகிராம்
மெக்னீசியம்- 43.50மில்லிகிராம்
பொட்டாசியம்- 1196.25மில்லிகிராம்
விட்டமின் சி-7.83மில்லிகிராம் காணப்படுகிறது.
பயன்கள் என்னென்ன?
செரிமான மண்டலம்
செரிமான மண்டலத்தை சரிசெய்வதில் முக்கிய பங்கு உலர்திராட்சைக்கு உண்டு, முதல்நாள் இரவே உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் சாப்பிடும் போது மலச்சிக்கல் போன்ற எந்தவொரு தொந்தரவுகளும் இருக்காது, செரிமானத்தை சரிசெய்வதுடன் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வாகிறது.
பார்வை குறைபாடு
உலர் திராட்சையில் உள்ள விட்டமின் ஏ, கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டீன் கண் பார்வையை மேம்படுத்துகிறது, வயதாவதால் ஏற்படும் பார்வை குறைபாடையும், கண்புரை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.
ரத்த அழுத்தம்
உடலில் உப்பு கிரகிக்கப்படும் அளவு அதிகரிக்கும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும், சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகும் உலர் திராட்சையில் இருப்பதால் உடலில் சோடியத்தின் அளவு சீர்ப்படுத்தப்படுகிறது, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் ரத்த அழுத்தத்தின் அளவு சீராக இருக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியம்
கால்சியத்தின் அளவு உலர் திராட்சையில் அதிகம் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும், தினமும் ஊறவைத்து சாப்பிடும் போது இதிலுள்ள சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும், எனவே நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது, இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
தோல் நோய்கள்
உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது, தினமும் இதை எடுத்துக்கொள்ளும் போது தோல் நோய் தொடர்பான பிரச்சனைகளும் வராமல் பாதுகாக்கும்.
இதய ஆரோக்கியம்
மிக முக்கியமாக கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கிறது, இரத்தம் உறைதலை தடுப்பதும் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும், உடலிலுள்ள டாக்சின்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்திவிடும்.