“சொன்னது போல் செய்தார்” நடிகை கயாடு லோஹரின் வைரல் பதிவு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை கயாடு லோஹர் அஸ்வத் மாரிமுத்துவிற்கும், பிரதீப் ரங்கநாதனிற்கும் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கயாடு லோஹர்
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடுலோஹர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து, வேற்று மொழி படங்களில் நடித்து வந்த இவர்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் பல்லவி என்ற கதாப்பாத்தில் நடித்து தழிழ் சினிமாவில் கால்பதித்தார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சற்று கிளாமர் ஆன ரோல் என்றாலும் அதில் நடித்து இளசுகளை கவர்ந்துவிட்டார் அவர். தற்போது சென்சேஷன் நடிகையாக மாறி இருக்கும் அவர் தற்போது டிராகன் படம் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது என கூறி இருக்கிறார்.
புதிய பதிவு
டிராகன் குறித்து கயாடு லோஹர் குறிப்பிடுகையில், அஸ்வத் மாரிமுத்து எனக்கு முதலில் ஜூம் அழைப்பில் கதை சொல்லும்போது கீர்த்தி கதாப்பாத்திரத்துக்கான கூறினார்.
அதில் நடிக்க அதிகம் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து அழைப்பு வரவில்லை.படம் என் கையை விட்டு போய்விட்டது என நினைத்தேன்.
இருப்பினும் ஒரு மாதத்தின் பின்னர் அவர் என்னை மீண்டும் அணுகி பல்லவி கதாப்பாத்திரம் பற்றி கூறினார். இது இரண்டு ஹீரோயின் கதை என யோசிக்கவேண்டாம், மக்களுக்கு உன்னை பிடிக்கும் வகையில் தான் காட்டுவேன் என கூறினார்.
அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். கொடுத்த வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி அஸ்வத் மாரிமுத்து. எனக்கு சிறந்த ஒரு அறிமுக படத்தை கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
பிரதீப் மாதிரி உண்மையான நண்பரை பார்க்க முடியாது. உங்கள் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கிறேன் என கயாடு லோகர் தெரிவித்து இருக்கிறார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
