பிரேக்அப் இல்லையா? விஜய் வர்மா உடன் அட்டகாசமாக ஹோலி கொண்டாடிய தமன்னா
நடிகை தமன்னா அட்டகாசமாக ஹோலி பண்டிகையை கொண்டாடி தற்போது வெயிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலகி வருகின்றது.
நடிகை தமன்னா
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிவர் தான் நடிகை தமன்னா. முதல் படத்திலேயே தனது நடிப்பாலும், தனித்துவமான நிறத்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு பல மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தமிழிலும் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.
சினிமா துறையில் அறிமுகமாகி குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
தமிழில் அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்ததுடன் அதில் தமன்னாவின் நடனத்துக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது. தமன்னா ஜெயிலர் படத்தில் 'காவாலயா' பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.
நடிகை தமன்னா பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்களும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.
ஆனால் அவர்கள் சமீபத்தில் பிரேக்கப் செய்துவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி இணையத்தில் வைரலானது.
தமன்னா உடனே திருமணம் செய்ய வேண்டும் என கூறியதாகவும், அதற்கு விஜய் வர்மா ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் சண்டைபோட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது குறித்து இருதரப்பில் இருந்தும் அதிகார பூர்வ தகவல்கள் ஏதுவும் வெளியானவில்லை.
தற்போது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக ஹோலி கொண்டாடி இருக்கின்றனர். இந்நிலையில் பல வருடங்கள் பின்னர் இப்படி ஹொலி பண்டிகையை கொண்டாடியதாக குறிப்பிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |