அம்மாவின் பெயரில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பித்துள்ள புதிய சேவை! குவியும் பாராட்டுக்கள்
நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தனது அம்மாவின் பெயரில் ஆரம்பித்துள்ள அன்னதான விருந்து சேவை குறித்த காணொளி இணையத்தில் பாராட்டுக்களையும், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
ராகவா லாரன்ஸ்
தனது தனித்துவமான டான்ஸ் அசைவுகளால் அமர்க்களம் படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் நடன கலைஞராக இருந்து தனது உழைப்பாலும் திறமையாளும் மட்டுமே டான்ஸ் மாஸ்டராக உயர்ந்தவர்.
இவரின் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 'முனி' படத்தை முதன்முதலாக டைரக்ட் செய்ததுடன், அதில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படம் ஹிட் கொடுத்தது. அதனையடுத்து, பேய், அமானுஷ்ய படங்களிலேயே முழு கவனத்தை செலுத்தினார்.
அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மட்டுமல்லாது குழந்தைகளின் மத்தியிலும் அமோக வரவேற்று காணப்படுகின்றது.

இதையடுத்து டான்ஸ் மாஸ்டர், நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், என அத்தனை துறைகளிலும் வெற்றி கண்ட இவர், தான் தனது தொழில் என அதை மட்டும் கவனித்துக்கொண்டு மற்றவர்களை போல் சுயநலமாக இல்லாமல், ஏராளமான சமூக பணிகளிலும் ஈடுப்பட்டு வருகின்றார்.
'லாரன்ஸ் அறக்கட்டளை' மூலம் சமூக பணிகளை மேற்கொண்டு வரும் இவர், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ செலவுகளை வழங்குதல், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றார்.

மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில், அவர் தனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது தனது அம்மாவின் பெயரில் ஆரம்பித்துள்ள அன்னதான விருந்து சேவை தொடர்பான தகவல்கள் இணைத்தில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |