ரூ.345 கோடி மதிப்பு கொண்ட ராதிகா மெர்ச்சண்டின் புடவை- அப்படி என்ன ஸ்பெஷல்?
பொதுவாக இந்திய பெண்களின் ஆடை வகைகளில் புடவைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றது.
அந்த வரிசையில் முகேஷ் அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டும் ஒருவர்.
அம்பானி குடும்பத்து பெண்கள் அணியும் புடவைகள் விலைமதிப்பு அதிகமானதாகவும், கலையம்சங்களுடன் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கும்.
இதன்படி, ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த புடவையொன்று தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
புகழ்பெற்ற கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த புடவை இந்திய ரூபாயில் ரூ. 345 கோடி மதிப்புள்ளது என கூறப்படுகின்றது.
இதனை கேட்ட இணையவாசிகள் வாயடைத்து போயுள்ளதுடன், அதில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதனை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ரூபாய் 345 கோடி மதிப்பு வர என்ன காரணம்?
1. ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருக்கும் அந்த சேலையை இந்திய நெசவாளர்கள் ஒவ்வொரு நூலையும் தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களால் நுணுக்கமாக நெய்துள்ளனர். அத்துடன் அதில் சேலையில், பாரம்பரிய இந்திய கலை வடிவங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. ராதிகா மெர்ச்சன்ட் புடவையில் மிகச் சிறந்த பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன. சேலையில் வைரம், மாணிக்கங்கள் மற்றும் மரகதம் உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் அலங்கரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை புடவையின் அழகை அதிகரிப்பதுடன் மதிப்பை அதிகரித்துள்ளது.
3. புடவையில் உள்ள மகத்தான அந்தஸ்து மற்றும் அதிநவீனத்தின் சின்னமாக உள்ளது மற்றும் கலாச்சாரத்தின் படைப்பாகவும் பார்க்கப்படுகின்றது.
4. ராதிகா மெர்சண்ட்டுக்கு இந்த சேலையை கொடுப்பதற்காக திறமையான கைவினைஞர்களின் குழு பல ஆண்டுகள் முயற்சி செய்து வந்தது.
5. ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருக்கும் இந்த ஆடை இந்திய ஜவுளிக் கலையின் செழுமையான பாரம்பரியத்தை வெளிகாட்டும் வகையில் தயாரிக்கப்பட்டது. இது ஆடம்பர ஃபேஷன் உலகிலும் இடம்பிடித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |