Siragadikka Aasai: விஜயாவை விவாகரத்து செய்யும் அண்ணாமலை... உண்மையை உடைத்த முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முத்து நடக்காத விடயத்தை கூறி பீதியில் ஆழ்த்தியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ரோகினி சிட்டியுடன் சேர்ந்து கொண்டு சத்யாவின் காணொளியினை வெளியிட்டு, மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தினார்.
ஆனால் முத்து தனது முயற்சியினால் சத்யா மீது வழக்கு வராதவாறு செய்ததுடன், ஒருவழியாக வீட்டிற்கும் அழைத்து வந்துள்ளார்.
மேலும் சத்யாவை தனது அம்மா விஜயாவிடம் அழைத்துச் சென்று மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். பின்பு அம்மாவை வீட்டிற்கு அழைக்கவே அவர் வர மறுத்துள்ளார்.
இதனால் அப்பா அம்மாவை விவாகரத்து செய்யப் போவதாக ஒரு கட்டுக்கதையை கூறியுள்ளார். இதனால் விஜயா பீதியில் ஆழ்ந்ததுடன், வீட்டிற்கு மனம் மாறி சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |