இரண்டாவது திருமணத்துக்கு தயாரான பிக்பாஸ் ரக்ஷிதா: மாப்பிள்ளை இவர் தானா?
பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி தொடர் மூலம் அனைவரது மனங்களையும் வென்ற கதாநாயகி ஆனார்.
இவரை சின்னத்திரையின் நடிகையர் திலகம் என்றும் கூறலாம். அந்தளவுக்கு இவரது முக பாவங்கள் இருக்கும்.
image - india posts english
சரவணன் மீனாட்சியைத் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் நடித்தார். அதனைத் தொடர்ந்து பிக்பொஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவர் நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபங்களின் நிமித்தமாக இருவரும் பிரிந்து வாழ்கின்ற நிலையில், பிக்பொஸ் வீட்டுக்குள் சென்றதும் அங்கே ரொபர்ட் மாஸ்டருடன் கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனால், ரொபர்ட் மாஸ்டர் தனக்கு வெறும் நண்பர் மட்டுமே எனக்கூறி அந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தற்போது ரச்சிதா ஒரு சீரியல் இயக்குநரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றது.
சில நாட்களுக்கு முன்பு குழந்தை தத்தெடுத்தல் பற்றி பேசியிருந்தார் ரச்சிதா.
எனினும் இந்த இரண்டாம் திருமணப் பேச்சு என்பது எந்தளவுக்கு உண்மையானது என்பது பற்றி அவரே கூறினால்தான் தெரியவரும்.