திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் சரவணன் மீனாட்சி நாயகி!
திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஸ்ரீஜா கர்ப்பமாக உள்ளார்.
‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்தனர்.
இந்த ஜோடியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து தம்பதிகள் ஆனார்கள்.
திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஜோடியாக ஒரு சில தொடர்களில் நடித்து வந்த நிலையில் தற்போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி என்று செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஸ்ரீஜாவின் சீமந்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.