புகழின் சர்ச்சை காட்சியை நீக்கிய பிரபல ரிவி... கொமடி என்ற பெயரில் குக் வித் கோமாளியில் அரங்கேறிய சர்ச்சை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்றுள்ளது. நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் போட்டியாளர்களாக இடம்பெற்றிருக்கின்றனர்.
இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு என்ட் கார்டு போட வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போல் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிக்பாஸில் கன்பெஃஷன் அறை வைத்திருப்பது போல் குக் வித் கோமாளியிலும் கன்ஃப்யூஷன் அறைக்குச் சென்று குறிப்புகளை எடுத்து வந்து குக்குகளுக்கு சொல்ல வேண்டும் என்று கோமாளிகளுக்கு டாஸ்க் வழங்கப்பட்டது. அப்போது புகழ் கன்பெஃஷன் அறைக்கு வந்த போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.
ஆண்களுக்கே உங்களை காதலிக்க தோன்றும் என்று பிக்பாஸ் ஸ்டைலில் குரல் ஒன்று ஒலித்ததுள்ளது. இந்த வசனத்துக்கு நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து டிவியில் ஒளிபரப்பாகும் போது அந்த வசனம் நீக்கப்பட்டது. ஆனால் ஹாட்ஸ்டாரில் அந்த வசனம் நீக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
They are using it realising it has thus homophobic origin. The CWC team has made sure it is used in the script. It was not even in the non scripted area. ? Cook with Comali has a huge problem and now the entire team has used this slur against a comment they made in script..! https://t.co/Sjptj3xaTk
— ?? Alyosha (@homoduos) March 14, 2021