டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: 2027 ஜூன் வரை அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!
sani-vakra-nivarthi-2026 : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவலுடைய கரும வினைகளுக்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்கும் கிரகமாகச் சனி பகவான் கருதப்படுகிறார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வார்.
மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளின் அதிபதியான சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில், வரும் டிசம்பர் 11ஆம் தேதி சனி பகவான் தனது வக்ர இயக்கத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நேர்கதியில் பயணிக்கத் ஆரம்பிக்கின்றார்.

சனியின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த முன்னேற்றங்களும், நிதி ஆராயமும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதன் மூலம் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை எந்தெந்த ராசிக்காரர்கள் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகின்றார்கள் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 10ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பல பிரச்சினைகள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
தொழில் ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார நிலையும் மேம்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், வாழ்க்கைத் துணையுடன் மனமகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
மாணவர்களைப் பொறுத்தவரை இந்தக் காலம் சிறப்பாக அமையும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகளின் புதிய திட்டங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தைப் பெற்றுத் தரும்.
மகரம்

மகர ராசியின் 3ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பைப் பெறலாம்.
பொருளாதார வசதிகள் அதிகரிப்பதுடன், ஆடம்பரமான வாழ்க்கையை வாழவும் வாய்ப்பு அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய இலக்குகளை அடைய முடியும்.
நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியில் முன்னேற்றம் அடைவதற்கான புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்

கும்ப ராசியின் 2ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்குத் தொழில் ரீதியாக முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகும். கடின உழைப்புக்கான உரிய பலனும் வருமானமும் கிடைக்கும்.
பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய சாதகமான வாய்ப்புகள் அமையும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |