விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி : இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இளவரசன் என்று போற்றப்படுபவர் புதன். ஒருவரின் அறிவுத்திறன், சிந்திக்கும் ஆற்றல், பேச்சுத்திறன், கல்வி மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு புதன் முக்கியக் காரணியாக விளங்குகிறார்.
சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகக் குறுகிய கால இடைவெளியில் ராசி மாற்றத்தை மேற்கொள்ளும் கிரகமாகவும் புதன் கருதப்படுகிறார். அந்த வகையில் தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வரும் புதன், வரும் டிசம்பர் 02 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு இடம்பெயர உள்ளார்.

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியில் புதன் டிசம்பர் 22 ஆம் தேதி வரை சஞ்சரிக்கவுள்ளார். அதன்பிறகு தனுசு ராசிக்குள் பிரவேசிப்பார்.
புதனின் இந்த ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கவுள்ளன.
குறிப்பாக, தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவதுடன், இதுவரை கிடைக்காத நல்ல லாபங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
அப்படி, விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் புதனால் அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசியின் 4ஆம் வீட்டிற்கு புதன் செல்வதால் தொழில் ரீதியாகச் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வணிகர்களுக்குச் சாதகமான ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நிதிநிலை மேம்படும். சட்ட விவகாரங்களில் வெற்றி கிடைக்கலாம்.
புதிதாகக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிப்பதுடன், அதன்மூலம் நல்ல பலன்களும் கிடைக்கும். குறிப்பாக இந்த காலகட்டத்தில் முன்னெடுக்கப்படும் முயற்ச்சிகள் வெற்றியளிக்கும்.
துலாம்

துலாம் ராசியின் 2ஆம் வீட்டிற்கு புதன் செல்வதால் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குத் திடீர் பணவரவு கிடைக்கலாம்.
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும். புதனின் அருளால் பொருளாதார வசதிகள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்குச் சாதகமான காலமாக இருக்கும். உங்கள் பேச்சுத் திறனால் முக்கியமான காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்வதால் தன்னம்பிக்கையும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதிநிலை வலுப்பெறுவதுடன், வணிகர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும்.
சிலருக்குத் திடீர் பணவரவு ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், ஆடம்பரமான வாழ்க்கையையும் அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |