10 நிமிடத்தில் தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பலகாரம்
பொதுவாக பண்டிகை நாட்களில் வீட்டில் செய்யப்படும் பலகாரங்கள் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். இனிப்பு அந்தளவு நம்முடன் ஊறிப்போய் உள்ளது.
உணவே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இனிப்பு பலகாரம் ஒன்று கொடுங்கள் என கேட்பவர்களை பலரை பார்த்திருப்போம்.
அந்த வகையில், பாசிப்பருப்பை வைத்து புதுச்சேரி ஸ்டைலில் எப்படி நெய் உருண்டை செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- பாசி பயிர் மாவு - 1/2 கிலோ
- சர்க்கரை - 1/4 கிலோ
- ஏலக்காய்
- நெய்
- பாதாம்
- முந்திரி
- பிஸ்தா
உருண்டை செய்வது எப்படி?
முதலில் அடுப்பில் அகலமான கடாயை வைத்து அதில் பாசிப்பயறு மாவை கொட்டி லேசாக வறுத்து கொள்ளவும்.
அதன்பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகிய மூன்றையும் பொடியாக பொடித்து கொள்ளவும்.

அடுத்து, வறுத்த மாவை ஒரு பெரிய தட்டில் கொட்டி தனியாக வைக்கலாம்.
அதே கடாயில் நெய் கொஞ்சம் விட்டு, பொடித்து வைத்திருக்கும் நட்ஸ்களை கொட்டவும். அதன் பின்னர் அதையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
கடாயில் மொத்த நெய்யுடன் வறுத்த மாவை கொட்டி சூடுடன் உருண்டையாக பிடிக்கவும். தற்போது நீங்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்த புதுச்சேரி நெய் உருண்டை தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |