பெட்டியுடன் கிளம்பிய ஜோவிகாவிற்கு இவ்வளவு சர்போர்டா? கண்டிப்பாக டைட்டில் வின்னர் இவர் தானாம்!
பெட்டியுடன் கிளம்பிய ஜோவிகாவிற்கு மக்கள் சார்பில் அதிகமான சர்போர்ட் காணப்பட்டு வருகின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
டைட்டில் வின்னர்
இப்படியொரு நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் ஜோவிகாவை எப்படியாவது வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதில் அதிகமான ஆர்வம் காட்டி வருகிறார்.
மற்ற போட்டியாளர்கள், இவர் டைட்டில் வின்னர் அடித்து விடுவாரோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறார். வனிதாவின் பொண்ணு என கூறும் போது மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்கள் வருவதை தாண்டி அவர் மேல் ஒரு நன்மதிப்பு உருவாகியுள்ளது.
“படிப்பதை தவற என்று கூறவில்லை.. எனக்கு படிப்பு வரவில்லை அதனால் வேறு துறையில் முயற்சிக்கிறேன்..” என பேசியதை மக்கள் அனைவரையும் புரிந்து கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஐபிசி மங்கை வெளியிட்ட மக்கள் கணிப்பு வீடியோக்காட்சியில் இந்த தடவை யார் டைட்டில் வின்னர்? என்பதனை தெரிவாக காட்டியுள்ளனர்.
உங்கள் பார்வைக்கு...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |