மஞ்சுமல் போய்ஸ் திரைப்பட நிதி மோசடியில் கைதான பிரபல நடிகர்
'மஞ்சுமல் போய்ஸ்' திரைப்பட தயாரிப்பில் ஏற்பட்ட நிதி மோசடி தொடர்பாக, பிரபல நடிகர் சௌபின் சாஹிர் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஞ்சுமல் போய்ஸ் திரைப்பட நிதி மோசடி
'மஞ்சுமல் போய்ஸ்' திரைப்பட தயாரிப்பில் ஏற்பட்ட நிதி மோசடி தொடர்பாக, பிரபல நடிகர் சௌபின் சாஹிர் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
திரைப்படத்தின் இலாபத்தில் இருந்து 40% பங்கு தருவதாக கூறி, முதலீட்டாளரிடமிருந்து சுமார் 7 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அதை திருப்பிக்கொடுக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்த நிலையில், மூவரும் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இது ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட நிதி மோசடி. தொடர்புடைய ஆவணங்கள், தொகை பரிமாற்ற விவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |