அப்பாவிற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் மகள் வாங்கிய விருது... வைரலாகும் புகைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திராக வலம்வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம்வந்தார்.
பின்பு தனது திறமையினால் நடிப்பிற்குள் நுழைந்த இவர், தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வருகின்றார். அடுத்தடுத்து பல சர்ச்சையில் சிக்கிய இவர் அதிலிருந்து மீண்டு தனது வேலையை செய்து வருகின்றார்.

இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஆராதனா சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார்.
அதாவது தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் 2022 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் மகள் ஆராதனா கலந்து கொண்டனர்.

இதில் ஆராதனா சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்று அசத்தியுள்ளார். மகள் வாங்கிய விருதுடன் சிவகார்த்திகேயன் மற்றும் மனைவியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அது மட்டுமின்றி சிறந்த படமாக தேர்வான கனா படத்திற்கு சிவகார்த்திகேயன் விருது பெற்றுள்ளார். துணை முதலமைச்சரிடமிருந்து இவர்கள் விருது வாங்கிய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |